நாம் வணங்கும் தெய்வங்கள்

மும்மூர்த்திகள் - பிரம்மா

 
மும்மூர்திகளில் ஒருவரான பிரம்மா நாம் வாழும் இந்த பூமி உட்பட்ட பிரபஞ்சந்தினை உருவாக்கியவர் ஆவார். அவரே மனிதர்களாகிய எம்மையும் மற்றும் சகல உயிரினங்களையும் படைத்தவர் ஆவார்.
 
இந்துக் கடவுள் பிரம்மா நான்கு முகங்கள் , நான்கு கைகள், வெண்தாடி கொண்டவராக காட்சி தருகின்றார் . அவர் ஒரு கையில் ஒரு சிறு தாமரையும் இன்னுமொரு கையில் வேதங்கள் கொண்ட ஓலைச் சுவடிகளும் காணப்படுகின்றன.

மற்றுமோர் கையில் ஒரு தண்ணீர் நிறைந்த கமண்டலத்தினை சுமக்கிறார். நான்காவது கை அபயம் காட்டி அருள் செய்வதாக எப்போதும் உள்ளது.

அவரது நான்கு முகங்களும் நான்கு வேதங்களான ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் ஆகியனவற்றை பற்றிய ஞான அறிவு குறித்து தெரிவிக்கின்றன. மும் மூர்த்திகளிலே, பிரம்மதேவரே பிரபஞ்சத்தினை உருவாக்க தேவையான பரிபூரண வேத அறிவின் மூலகர்த்தாவாக உள்ளார் என்பதனை குறிக்கின்றன.

நான்கு திசைகளையும் சுட்டும் நான்கு கைகளும் பிரம்மதேவர் எங்கும் நிறைந்த, எல்லாம் வல்லவர் என அறிவிக்கின்றன.

 
 
வெள்ளை தாடியானது நிறைந்த ஞானஅறிவினையும், அது நீண்ட தாடியாக இருப்பது படைத்தல் தொழில் ஒரு முடிவற்ற செயல்பாடு என தெரிவிக்கின்றது.
 
பிரம்மாவின் தலையில் காணப்படும் கிரீடமானது, அவர் படைப்பு செயல்பாட்டின் மீது கொண்டுள்ள முற்று முழுதான ஆளுமையை தெரிவிக்கின்றது. தாமரை மலர் மீது உட்கார்ந்தவாறு பிரம்மதேவர் காட்சி அளிப்பது அவர் கொண்டுள்ள மிக உயர்வான படைப்பாக்க சக்தியை குறிக்கிறது.
 
இந்து மதம் புராணங்களின் படி, ஒரு அன்னப்பறவையானது தூய பால் எது மற்றும் தண்ணீர் கலந்து பால் எது என வேறுபடுத்தி அறியக் கூடிய ஒரு பறைவையாகும். இது ஒரு விதி விலக்கான எண்ணியுணரும் உணர்வு ஆகும்.
 
இந்த பறவையினை வாகனமாக பிரம்மா கொண்டுள்ளமையானது, பிரம்மா ஒவ்வொரு உயிரினது முழு வாழ்க்கை காலம் குறித்து எண்ணியுணர்ந்தே, அவ்வுயிரினையும், முழு பிரபஞ்சத்தின் படைக் கின்றார் என்பதனை குறிக்கின்றது.
 
பிரம்மாவின் துனைவி சரஸ்வதி தேவி ஆவார்.
 
 
ஏன் பிரம்மதேவரினை வணக்கும் பக்தர்கள் குறைவாக உள்ளனர்?
 
எமது தலைவிதி மற்றும் முக்கிய விடயங்களான எமது வடிவம், உடல்நலம், ஆணா அல்லது பெண்ணா, யாருக்கு எங்கே பிள்ளையாக பிறக்கின்றோம் போன்ற பல விடயங்களை, நாம் இவ்வுலகில் பிறக்கும் முன்னே பிரம்மா தீர்மானித்து முடித்து விடுகின்றார்.
 
அதற்கு ஏற்ப, நாம் பிறந்த பின்னர் நாம் எதனையுமே மாற்ற முடியாது அல்லவா.
 

அதாவது, நாம் இவ்வுலகில் பிறந்த பின்னர், எமக்கும் பிரம்மதேவருக்கும் எவ்வித தொடர்பும் இருக்கப் போவதில்லை. எனவே தான் அவரை வணக்கும் பக்தர்கள் குறைவாகவே உள்ளார்கள் என்பது புரிந்துகொள்ளக்கூடியது. இதன் காரணமாவே மற்றைய இருவருடனும் ஒப்பிடுகையில் பிரம்மதேவருக்கு பல கோவில்கள் இல்லை.

நீங்கள் எப்போதாவது இரண்டு குழந்தைகளை ஒப்பிட்டு வியந்து இருக்கிறீர்களா? ஒன்று மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து ஒரு வேலை உணவுக்கே வழியின்றி பசியுடன் இருக்கும். அதே வேலை இன்னும் ஒரு குழந்தையோ, ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்து விரும்பியவற்றை, எந்நேரத்திலும் சாப்பிடக் கூடியதாக இருக்கும்.

ஒருவர் நாட்டை ஆளும் அரசராக பிறந்திருக்க இன்னுமொருவரோ அந்த அரசனையும் , அவரது ஆட்சியினையும் பாதுகாக்கும் நோக்கில் போரிட்டு இருக்கும் ஒருவராக பிறந்திருப்பார்.

யார் இந்த தலைவிதி குறித்த முடிவினை செய்கிறார்கள்? ஏன்?

நிச்சயமாக அதிர்ஷ்டம் என்று சொல்ல முடியாது அல்லவா?

சிந்தித்து பாருங்கள், குழந்தைகளே!

இந்த படத்தில், நீங்கள் ஒரு மிகவும் வலுவில்லாத ஒருவரினை பார்கிறீர்கள். தனது உணவுக்காக பிச்சை கோருகின்றார்.

சமூகப் பாதுகாப்பு சட்டங்கள் உள்ள நாடுகளில் இது போன்றவர்களை அரசாங்கம் பாதுகாக்கும் எனினும், இவரது நிலைமை மிகவும் துரதிஸ்ட வசமானது என்றே நாம் கருதுவோம் அல்லவா.

எனினும் இந்து சமயப் பார்வையில், இவரது இந்த நிலைமை இவர் போன பிறவியில் செய்த பாவங்கள் காரணமாக தான் ஏற்பட்டு உள்ளது என்றே அமையும்.

இவருக்கு பிச்சை போடும் சிலர் சாதாரணமாக , ‘இப்படி ஒரு துன்ப நிலைமை வர, என்ன பாவத்தினை செய்தாயோ’ என்று சொல்லி, ‘ செய்த பாவத்தினை கழுவி, நீக்கிவிட இறைவனை பிராத்தனை செய்’ என்று கூறுவதனை கேட்க முடியும்.

அதே போல் ஒருவர் ஒரு பெரும் நோயில் இருந்து மீண்டு வந்தால் அல்லது பெரும் விபத்தில் உயிர் பிழைத்து வந்தால், ஏனையோர் அவர் குறித்து பேசும் போது, ‘அவர் முன்பு செய்த புண்ணியம் அவரினை காத்து இருக்கிறது’ என்று சொல்வார்கள்.

அதாவது ஒருவருக்கு வாழ்கையில் நிகழக் கூடிய நிகழ்வுகள், அவரது முன் பிறப்பின் அவர் செய்த நல்ல அல்லது தீய செயல்களின் பலன் என்பதே இந்துகளின் நம்பிக்கை ஆகும்.

Leave a Comment