முனிவர்களும், சமயப் பெரியார்களும்

உலக மக்களை உய்விப்பதற்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சமயமே இந்து சமயம். இந்து சமயம் மக்களை உயர்ந்த ஒழுக்க நெறியில் வாழ வைத்து, இறுதியில் அவர்கள் கருணைக் கடலாம் இறைவனின் திருப்பாதங்களை அடைய வழி காட்டுகின்றது.

இறைவனின் புகழைப் போற்றிப் பாடவும், இந்து சமயத்தைப் பரப்பவும், இந்து சமயத்தின் சிறப்புகளையும், நல்லொழுக்க நெறிகளையும் உலக மக்களுக்கு விளக்கிடவும் தமது வாழ்நாட்களைச் செலவிட்ட சமய ஞானிகள் ஏராளம்.

இந்து சமயத்தின் மிக உயர்வான காலமான வேத காலத்திலிருந்து, இன்றைய காலம் வரையில் இந்து சமயத்தில் மகா முனிவர்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள் (சிவபெருமானை வணங்குவதையே தம் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்கள்), நான்கு சமய குரவர்கள் ( சிவ பெருமானைப் போற்றித் தேவாரப் பாடல்களைப் பாடியவர்கள் ), நான்கு சந்தான குரவர்கள் ( சிவபெருமானைப் போற்றி எழுதியவர்கள்), பன்னிரண்டு ஆழ்வார்கள் ( மகா விஷ்ணு பகவானைப் போற்றிப் பாடி, அதற்காகவே தமது வாழ்நாட்களை அர்ப்பணித்தவர்கள் ), இறையருட் சித்தர்கள் ( இறைவன் திருவருளினால் பல சித்துகளைப் பெற்று உலக மக்களுக்கு வழி காடிய இறை ஞானிகள்), இறைவனின் அம்சங்களாகப் போற்றி வணங்கப்படும் இந்து சமயப் பெரியார்கள், மற்றும் இறைவனின் பணி செய்வதற்காகவே பெரும் இயக்கங்களை நடாத்தும் இந்து மடாதிபதிகள் ஆகியோரைப் பற்றிய சிறந்த விபரங்களை இப்பகுதியில் உங்களுக்கு வழங்குகின்றோம்.

சிவபெருமானை போற்றிய நாயன்மார்கள்

மஹா விஸ்ணுவை போற்றிய ஆழ்வார்கள் 

சித்தர்கள் (விரைவில்)

இந்து சமயப் பெரியார்கள் (விரைவில்)

மகா முனிவர்கள் (விரைவில்)