சிவபெருமானை போற்றிய நாயன்மார்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள்.

 

இந்து சமயம் மிகவும் தொன்மையானது. அதன் முதன்மையான பிரிவான சைவசமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீதான, சிவவழிபாடு 5,000 வருடங்கள் தொன்மையானது.

பிறமதங்களின் ஆதிக்கம் பரவ தலைப்பட்டு, சைவசமயம் நலிவுற தலைப்பட்ட காலங்களில் எல்லாம், அவ்வப்போது இறைவன் அருளால் தோன்றிய பல அடியவர்களினால் சைவசமயம் போற்றி வளர்க்கப்பட்டது. கி.பி 7ம் நூறாண்டு சைவசமயத்தின் உன்னதமான காலமாகும்.

இந்த நூறாண்டிலேயே, அப்பரும், சம்பந்தரும் தோன்றி, தளர்வடைந்திருந்த சைவசமயத்தினை, நிலைபெற்று ஒங்கும் வண்ணம், பெரும் தொண்டு செய்தனர். அவர்களை தொடர்ந்து பலரும் இந்த தொண்டினை செய்து, சைவசமயம் இன்றுவரை உறுதியாக நிற்க பெரும் சேவையினை செய்தனர். இந்த தொண்டினை செய்தவர்களை நாயன்மார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் 63 பேராவர். இவர்களில் மூவர் பெண்கள் ஆவர்.

இந்த நாயன்மார் வாழ்க்கை வரலாறுகளையும், அவர்களது தொண்டுகளையும், 12ம் நூறாண்டில் சேக்கிழார் என்பார், தமது பெரிய புராணம் என்னும் 4281 பாடல்களாக தொகுத்துள்ளார்.

இந்த 63 நாயன்மாரில், நால்வர் பாடல்கள் மூலம் இறைவனை துதித்தார்கள். இவர்கள், ‘சமய குரவர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். ஏனையோர் தமது தொண்டுகள் மூலம் துதித்தார்கள்.

இங்கே நாம் ஒவ்வொருவராக, அவர்களை சந்திப்போம்.

‘சமய குரவர்கள்’ – இவர்கள் இறைவனை பாடிப் புகழ்ந்தவர்கள்.