கடவுள் வழிபாடு

அன்புக் குழந்தைகளே,

அமைதியான, ஆனந்தமான வாழ்வைப் பெறுவதற்காகக் கடவுளின் அருளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் ?

கடவுளிடம் முழுமையான நம்பிக்கையுடனும், அன்புடனும், பக்தியுடனும் அவரை வணங்க வேண்டும்; பிரார்த்தனை செய்ய வேண்டும்; கடவுளைப் போற்ற வேண்டும்; நமது தேவைகளை அவரிடமே கேட்க வேண்டும்.

நமக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை அவர் அறிவார். அதற்கேற்றபடி அவர் நமக்குத் தமது அருளைத் தருவார்.

கடவுளை வழிபடும்போது, நமது மனம் தூய்மை அடைகின்றது. நம் மனதில் உறைந்திருக்கும் தீய எண்ணங்கள் மறைந்து, நல்லெண்ணம் வளர்கிறது.

சகல உலகங்களுக்கும் தலைவராகிய கடவுளைப் போற்றிப் பிரார்த்தனை செய்வதன் மூலம் நமது கவலைகளையும், துன்பங்களையும் தணிக்க முடிகிறது.

கடவுளை நாம் ஆலயத்திலும் வழிபடலாம்; வீட்டிலும் வழிபடலாம். உள்ளத்தூய்மையுடனும், அன்புடனும் நாம் எங்கேயிருந்தும் கடவுளை வழிபடலாம்.

ஆலயத்திலும், வீட்டிலும் கடவுளை வழிபடும் முறைகளை இந்தத் தொடர் விளக்குகிறது. படித்து, அதன்படி பிரார்த்தனை செய்து, கடவுளின் நல்லருளைப் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.

சூழலில் உள்ள திருக்கோவில்

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

கடவுள் வழிபாடு - ஆலயம்

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

கடவுள் வழிபாடு - வீடு

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor