இந்து விழாக்கள், பண்டிகைகள்

பண்டிகைகளும், விரதங்களும்

அன்புக்குழந்தைகளே,

பண்டிகைகளும், விரதங்களும் இந்து சமய மக்களின் இரண்டு கண்களாக விளங்குகின்றன. பண்டிகைகள் இந்து சமய மக்களின் பாரம்பரிய பண்பாட்டை வளர்க்கின்றன. இந்துக்கலாச்சாரத்தை மக்கள் புரிந்து கொள்ள உதவுகின்றன. 

விரதங்கள் மனிதரின் உள்ளத்தைத் தூய்மையாக்கி, வாழ்வை மேன்மைப்படுத்துகின்றன.

நாம் தினமும் வீட்டில் அல்லது கோயிலில் கடவுளை வணங்குகின்றோம். ஆனால், பண்டிகைக்காலம் வரும்போது, நமது உறவினர்களுடனும், நண்பர்கள், அயலவர்களுடனும் சேர்ந்து குதூகலமாகக் கொண்டாடுகின்றோம்.

திருக்கோயிலின் தேர்த்திருவிழாவின்போது, பல ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றாகக் கூடித் தேரை இழுக்கிறார்கள். (அப்போதுதான் தேர் நகரும், ஓடும்.) அதேபோல், திருவிழாவை எல்லாரும் சேர்ந்து, மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றார்கள்.

விநாயகருக்கு சதுர்த்தி, முருகனுக்கு சஷ்டி, சிவபெருமானுக்கு சிவராத்திரி, மகாவிஷ்ணுவுக்கு வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ணனுக்கு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தீபாவளி, அனுமனுக்கு அனுமன் ஜெயந்தி, முப்பெரும் தேவியர்க்கு நவராத்திரி என்று வருடம் முழுவதும் பண்டிகைகளைக் கொண்டாடி, சகல தெய்வங்களையும் போற்றி வணங்குகின்றோம்.

இவ்வாறு, இறைவனின் திருவருளை நாம் பெற்று வாழ்வில் உயரவும், உய்வுறவும் உதவும் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் பற்றி இப்பகுதியில், அழகிய படங்களுடன் விளக்குகின்றோம். படியுங்கள். அதன்படி வாழ்க்கையில் கடைப்பிடித்து, இறைவன் திருவருளைப் பெறுங்கள்.

பண்டிகைகள்

பண்டிகைகளும், விரதங்களும் இந்து சமய மக்களின் இரண்டு கண்களாக விளங்குகின்றன. பண்டிகைகள் இந்து சமய மக்களின் பாரம்பரிய பண்பாட்டை வளர்க்கின்றன.