மஹா விஸ்ணுவை போற்றிய ஆழ்வார்கள்

மஹா விஸ்ணுவை போற்றிய ஆழ்வார்கள்

சிவபெருமானின் முதன்மையான பக்தர்களான நாயன்மார்கள் போலவே, ஆழ்வார்கள், மஹாவிஷ்ணுவின் முதன்மையான பக்தர்களாக கருதப்படுகின்றார்கள்.

தென் இந்திய தமிழ் பேசும் பகுதிகளில் வைஷ்ணவத்தினை பிரபலப்படுத்துவதில் ஆழ்வார்கள் முக்கியமானவர்களாக இருந்தனர்.

இவர்களது பாடல்கள், இறைவன் மீதான அதி தீவிர பக்தி, ஆன்மீக செயல்பாடுகள் ஆகியவைகளை ‘நாலாயிர திவ்விய பிரபந்தம்’ என்னும் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. 108 ஆலயங்களின் புகழ் கூறி வணங்கும் 4000 பாடல்கள் கொண்ட இந்த தொகுப்பில், அந்த 108 ஆலயங்களும் ‘திவ்விய தேசம்’ என குறிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல்களை தொகுத்தவர் நாதமுனி (824 – 924 CE) எனும் 10ம் நூறாண்டில் வாழ்ந்த வைஷ்ணவ தத்துவஞானி ஆவார். இவர் அந்த தொகுப்புகளை “திராவிட வேதம் அல்லது தமிழ் வேதம்” என அழைத்தார்.

நாலாயிர திவ்விய பிரபந்த பாடல்கள், தினமும், மேலும் முக்கியமான திருவிழா காலங்களிலும் தென் இந்தியாவில் உள்ள விஷ்ணு ஆலயங்களில் எல்லாம் பாடப்படுகின்றன.

இந்த ஆழ்வார்கள் பல்வேறு சமூக நிலைகளை (சாதி) சேர்ந்தவர்கள் ஆக இருந்தார்கள்.

ஆழ்வார்கள் குறித்து சொல்லும், மணவாள மாமுனிகள், 12 ஆழ்வார்களில் முதல் மூன்று ஆழ்வார்கள் ஆன, பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் துவாபர யுகத்தினை 4200 கி.மு (before 4200 BCE) சேர்ந்தவர்கள் என கூறுகின்றார்.

எவ்வாறாயினும், சரித்திராசிரியர்கள் இந்த மூவரும், நிச்சயமாக 12 ஆழ்வார்களில் மூத்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.

இந்த 12 வைஷ்ணவ ஆழ்வார்களும், நான்கு சைவ நாயன்மார்களுடன் சேர்ந்து அப்போது ஆண்டுகொண்டிருந்த பல்லவ அரசர்கள் மீது செலுத்திய செல்வாக்கினாலேயே, பக்தி மார்க்கத்தினை உருவாக்கி, அப்போது வீறு கொண்டு எழுந்து வந்த பௌத்தத்தினையும், சமணத்தினையும், (Buddhism and Jainism ) செல்வாக்கு இழக்க வைத்து, இந்துமதத்தின் இரு முக்கிய பிரிவுகளான சைவத்தினையும், வைஷ்ணவதினையும் இன்று வரை உறுதியாக நிலை நாட்டி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொய்கை ஆழ்வார்

பொய்கையில் பிறந்ததால், இவருக்குப் பொய்கை ஆழ்வார் என்ற பெயர் உண்டானது.

ஆண்டாள் கதை

ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே ஒரு பெண் அடியார் ஆவார்